moon stone

 

இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது.
மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. கேரளாவிலும் இந்தக் கற்கள் கிடைக்கின்றன.


இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும்.

இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.

இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர்.

இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர்.

சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள்.

இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள்.

ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள்.

சந்திரனுக்கு உகந்த கல்லாக இருப்பதால் இதை அணிவோர்க்கு மனோபலம் அதிகமாகும்.

இதனால் மனக்குழப்பங்கள் நீங்கி மனம் அமைதி அடையும்.
ஜலகண்டம் போன்றவைகளிலிருந்து பாதுகாக்கும்.

பொருள் வரவு தடைஇன்றிப் பெருகும்.

அணிபவர்களின் மனம் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும், இருக்கும்.

மனபிரமை, மூளைக்கோளாறு போன்றவைகள் நீங்கும்.

கல்வியில் கவனமில்லாமல்(CONCENTRATION) இருப்பதைத் தடுக்கும்.
படிப்பில் ஆர்வத்தைத் தூண்டும்.

வாயிற்றுக் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

தாம்பத்திய வாழ்வில் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றைக் குணபடுத்தும்.

குழந்தைகளுக்குச் சந்திரகாந்தக் கல்லை டாலராகச் செய்து அணிவித்தால் ஆரோக்கியம் பெருகும்.

நிம்மதியான (INSOMNIA)தூக்கம் இல்லாமல் தவிப்போர்களுக்கு, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

தியானம் போன்றவற்றில் ஒருமித்த நிலையை (CONCENTRATION)உருவாக்கும்.

மேற்கண்ட அதிர்ஷ்டப் பலன்களை நாடுவோர் அனைவரும் இக்கல்லைப் பயன்படுத்தலாம்.

இதை சந்திரமணி என்று பெயர்சூட்டித் தமிழ் மக்கள் மகிழ்ந்தனர். சந்திரனின் கதிர்களை ஆகர்ஷித்து மக்களுக்குப் பல நன்மைகளை வாரி வழங்குகிறது .

எனவே 2,11,20,29ல் பிறந்த சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளோரும் 7,16,24 தேதிகளில் பிறந்த கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளோரும் இக்கற்களை முத்துவிற்கும், வைடூர்யத்திர்க்கும் மாற்று இரத்தினமாகப் பயன்படுத்தினால் அற்புதமான பலன்களை அடையலாம்.

வெளிநாட்டவர்கள் இக்கற்களை அதிகம் பயன்படுத்தி நன்மைகளை அடைகின்றனர்.

நம்மவர்கள் குறைவாகவே இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்