stones

 இரத்தின மணிகள்  part 1


இரத்தின மணிகள் தரும் பலன்களோ இவைகளை பற்றிய தகவல்களோ நமக்கு தெளிவான புரிதலை தருவது இல்லை .

நவரத்தினம்களை அணிந்தும் மேன்மை ஏற்படவில்லை என்று சொல்பவர்கள் ரத்தினம்களை எப்படி முறைப்படுத்தி வைத்து கொள்ளவேண்டும் என்று அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.

ஒரு நண்பரின் சூரிய விரலில் மாணிக்க மோதிரத்தை நாம் கண்டதும் இதை எதற்காக அணிந்து உள்ளீர்கள் இதன் மதிப்பு என்ன?என்றதும் அவர் அந்த மோதிரத்தை கழற்றி என் கைகளில் தந்து விட்டு நான் உத்தரம் நட்சரத்தில் பிறந்தவன் என்பதால் ஒரு சோதிடர் இதனை அணிந்து கொண்டால் எனக்கு மேன்மை ஏற்படும் என்றார் என்றும் இரண்டாயிரத்திற்கு இதை விலைகொடுத்து வாங்கிவந்தேன் என்றார்.

இதை அணிந்த கொண்டபின் உங்கள் வாழ்வில் ஏதேனும் மேன்மைகள் ஏற்பட்டதா என்றதும் இதுவரை இல்லை என்று சொன்னார்.

நவரத்தினம்களை அணிபவர் சில கட்டுப்பாடுகளை மற்றும் நியதிகளை கடைபிடிக்க வேண்டும்.இதை விற்பனைசெய்பவர்களோ அல்லது சோதிடர்களோ தான் அவர்களுக்கு சொல்லவேண்டும்.

எனக்கு கற்களை விற்பனை செய்த ஒரு பெரியவர் எனக்கு சொன்னது.“ரத்தினம்கள் ஒரு நபருக்கு கிடைத்த பின் அவர் அதை மனிதன் தீண்டாத நீரில் கழுவி பின்பு அரைத்த சந்தனத்தில் அபிஷேகம் செய்து பின் அணியவேண்டும்
உறங்கும் பொழுது அவைகளை பசுவின் பாலில் கிடத்திவிட்டு மறுநாள் குளித்தபின் மீண்டும் அணிந்து கொள்ள அவைகளின் பலன்கள் மென்மையாகும்

மேலும் நம் விரல்களில் அணிந்த மோதிரத்தை பிறர் அணிய தரக்கூடாது இவ்வாறாக அடுத்தவர் அணியும் பொழுது இவைகள் தோஷம் பெற்று விடும்”என்றார்.

பழைய சோதிடநூல் தகவல் வாஸ்து தகவல் ரத்தினம்களை பற்றிய தகவல் கொண்ட நூல்களில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் அறிந்தவர்கள் சிலர் மட்டுமே உண்டு.

அனுபவத்தில் பலன்களை கண்டு உணர்ந்தவர்கள் மட்டுமே ரத்தினம்களை அணிவதை பற்றிய பலன்களை சரியாக செல்வதை நாம் கண்டது உண்டு.

வடக்கிந்திய வியாபாரிகள்  சிலர் பலவிதமான வர்ண கற்களை அணிவதையும் சில முதலாளிகள் அவர்கள் கடையின் கல்லாப்பெட்டியில் ரத்தினம்களை கிடத்தி வைத்து இருப்பதை நாம் கண்டது உண்டு அதை பற்றி அவர்களிடத்தில் கேட்டால் லட்சுமி தேவி நிறைவாக அருள் செய்வாள் என்று மட்டும் சொல்வார்கள்.

அவர்களிடத்தில் நெருங்கி பழகி ஒரு வணிகரிடம் கேட்டபொழுது அவர் என்னிடம்
“சந்தன பேழையில் பச்சை பட்டு துணியில் மரகத்தை சுருட்டி வைத்து அந்த பேழையை பணப்பெட்டியுடன் வைத்து இருப்போம் தீபாவளி மறுநாள் லட்சுமி பூசையில் இதையும் பூஜித்து வருவோம்”
இப்படி செய்வதால் எங்களுக்கு பணத்தேவைகள் நிறைவாக கிடைக்கும் என்றார்.


மார்வாடி நண்பர் சொன்ன தகவல் எனக்கு சில சிந்தனைகளை தூண்டியது

ரத்தினக்கற்கள் உடலில் அணியாமல் அது இருக்கும் இடத்திலேயே அதனின் அபூர்வ சக்திகள் வெளிப்படுமா என்ற கேள்விதான் அது.
பௌர்ணமி தினம் நாம் கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

தஞ்சை மாவட்டம் தென்குடி திட்டையில் அமைந்த கோவிலில் விமானம் சந்திர காந்த கற்களால் அமைக்கபட்டு எதிரே அமைந்த குளத்தில் வெளிப்படும் ஈரக்காற்றை கிரகித்து நான்கு நிமிடத்திற்கு ஒரு முறையாக கீழ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கத்தின் மேல் விழும்படிஅமைத்து உள்ளார்கள்.

இதைபற்றி ஒரு அடியாரிடம் கேட்டபொழுது மனதில் ஏற்படும் சஞ்சலம் குழப்பம் மற்றும் அமைதியின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இங்கே அமர்ந்து தியானம் செய்தால் மனம் ஒரு நிலைப்படுவதுடன் நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரும் சந்திரகாந்த கல்

இதை அறிந்த சித்தர்கள் இந்த கல்லை கோவில் விமானமாக அமைத்து சந்திர திசை மற்றும் சந்திரனின் சாரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார கோவிலாக இந்த தலத்தை குறிப்பிட்டுள்ளார்கள் என்றார்.
அடியார் சொன்னது எத்தனை சத்திய தகவல்கள் என்று நாம் சில கோவில்கள் சென்ற பொழுது அறிந்து கொள்ளமுடிந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் என்ற மலைத்தளத்திற்கு நாம் சென்ற பொழுது அங்கு உள்ள கோவில் தகவல்களில் சிவபெருமான் நவகிரக தேவர்களை மணிகளாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டார் என்ற தகவலுடன் வேதம்களை தன்னில் அடக்கி தானே மலைத்தளமாக இருக்கிறார் என்று தகவல் இருந்தது.


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்த விடங்கர் கோவிலில் இரத்தின லிங்கம்கள் பூசிக்கப்பட்டு பேழையில் பாதுகாக்க படுகிறது என்பதனை நாம் அறிந்து கொண்டோம்.


Part 2
ரத்தினம் தான் இருக்கும் இடத்தில் கதிர்களை வெளிப்படுத்தி அங்கு ஒரு சுப சூழ்நிலையை உண்டாக்கும் சக்தி படைத்தது என்று நாம் புரிந்து கொண்டு ஒரு சித்த வைத்தியரிடம் இதை பற்றிய தகவலை சொன்னபொழுது அவர்

செல்வம் படைத்தவர்கள் ரத்தினம்களை விலைகொடுத்து பெறுவார்
இயலாதவர்களுக்காக இறைவன் கொடுத்தது மரம்கள் என்றார்.

ஆம் மரத்தின் வேர்கள் ரத்தினம் தரும் பலன்களை தருவதால் நாம் மருத்துவத்திற்கு வேர்களை பயன்படுத்துவோம்.

உதாரணமாக“சுக்ரனின் ஆசிகளை பெற நாவல் மரத்தின் வடக்கு வேரை எடுத்து பூசித்து இடுப்பில் கட்டிக்கொண்டால் ராஜ வசியமும் குரல்வள நேர்த்தியும் உண்டாகும்” என்றும்

மனையில் “முருங்கை வளர்க்கும் பொழுது செவ்வாயின் ஆசிகளையும் பவளத்தின் பலன்களையும்”

“மாமரத்தின் மூலம் குருவின் ஆசிகளையும் புஷ்பராக பலன்களையும்”

“வில்வம் வளர்க்கும் பொழுது கேதுவின் ஆசிகளையும் வைடூரிய பலன்களும்”

“அரளி செடிகள் வளர்க்கும் பொழுது ராகுவின் ஆசிகளையும் கோமேதக பலன்களையும்”

“மல்லிகை முல்லை போன்ற வாசனை மலர்களை வளர்க்கும் பொழுது புதனின் ஆசிகளையும் மரகதத்தின் பலன்களையும்”

“மாதுளை மரத்தை வளர்க்கும் பொழுது சூரியனின் ஆசிகளையும் மாணிக்கத்தின் பலன்களையும்”

“மந்தார மரம் தாமரை போன்றதை வளர்க்கும் பொழுது சந்திரனின் ஆசிகளும் முத்துவின் பலன்களையும்”

“வேப்பமரம் வளர்க்கும் பொழுது சனியின் ஆசிகளையும் நீலக்கல்லின் பலன்களையும்”நாம் கிடைக்க பெறுவோம் என்றார்.


வேர்கள் சஞ்சீவ தன்மை உடையது உயிரோட்டம் கொண்டது.

வேர்கள் ஏற்படுத்தும் ரசம் நம் குருதியில் கலக்கும் பொழுது தடைபட்ட அனைத்து ஓட்டமும் சீராகும் என்று வைத்திய நூல்கள் சொல்கிறது.


இரத்தின கற்களை அணியும் முன் அவைகளை நாம் ஒரு மண்டல காலம் இடுப்பில் படும்படி வைத்து சோதனை செய்து பிறகே அணிந்து கொள்வது உத்தமம் .

கற்கள் நம்முடைய இல்லத்தில் அல்லது உடலில் இருக்கும் பொழுது நோய்களோ சண்டைகளோ மனசஞ்சலமோ ஏற்படுத்தாது இருப்பின் அவைகள் நமக்கு மேன்மைகள் செய்யும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
இரத்தின மணிகள்


ரத்தினம்களுக்கும் இயல்பான குணம்கள் உண்டு .


“ரத்தினம் என்பதும் ரத்தம் என்பதும் ஒருவகையில் ஒன்று போல செயல்பாட்டை கொண்டது எனலாம்.
அதாவது ரத்தம் நம் உடலில் தொடர்ந்து அசைந்தும் ஓடிக்கொண்டும் இருக்கும் தன்மையை கொண்டது இது போல இரத்தின கற்கள் தொடர் ஓட்டமான கதிர்களை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கும் தன்மையை பெற்றது”எனலாம்.


நண்பர் ஒருவர் செட்டிநாடான காரைக்குடியை சேர்ந்தவர்.இவரின் மகள் திருமணத்திற்கு  குடும்பத்துடன் சென்ற பொழுது அவர்களில் பலர் ரத்தினம்கள் பதித்த அணிகலன்களை அணிந்து இருந்ததை  கவனித்தோம்.

இதை பற்றி  மற்ற ஒரு நண்பரிடம் கேட்ட பொழுது அவர் எங்கள் சமுதாயத்தில் ரத்தினம்களை அதிகம் விரும்புவர் என்றும் ரத்தினக்கற்கள் கற்கள் எங்களுக்கு அதிர்ஷ்டம் தருவதுடன் சில நோய்களை எங்களுக்கு தராமல் பாதுகாத்து செயல்படும் என்பதால் பல தலைமுறைகளாக நாங்கள் இவைகளை பாதுகாத்து அணிந்து வருகிறோம் என்றார்.


அந்த நண்பர் சொன்ன கூற்று படி நாமும் ரத்தினம்களின் தன்மைகளை பற்றி தகவல்களை நூல்களில் படித்தது உண்டு.

“மரகத கற்கள் கழுத்து பகுதியில் அணியப்படும் பொழுது தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும் என்றும் குரலின் வளத்தையும் இனிமையையும் மெருகுயேற்றி தரும்.

கோமேதகம் தீட்டை விலக்கும் மனத்தெளிவு துணிச்சலும் தரும்.

  நீலக்கல் த்ரிஷ்டி விலக்கி மனதை ஒருமை பட செய்வதுடன் பித்த நோய்கள் வராமல் தடுக்கும்.

பவளம் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் மனதிற்கு பலத்தை தரும்.

புஷ்பராகம் உடலின் வெப்பத்தை சமம் படுத்துவதுடன் தீய கனவுகள் வராமல் தடுக்கும்.

வைடூரியம் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியும் கண்களுக்கு பலமும் தருகிறது.

முத்து மனதிற்கு மகிழ்ச்சியும் தருவதுடன் வெண்குஷ்டத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


ஒரு சோதிடரிடம் நானும் எனது நண்பரும் எங்கள் ஜாதகபடி நாங்கள் எந்த கோள்களின் கற்களை அணிந்து கொள்வது சிறப்பு என்று கேட்ட பொழுது.அந்த சோதிடர் கோள்களின் தன்மையை ஆராய்ந்து சுப கோள்களை கணக்கிட்டு அதனுடைய கற்களை அணிந்து கொள்ள சொன்னார்.அதன் படி நான் புஷ்ராகமும் பவளமும் மோதிரமாக அணிந்து கொண்டேன் நண்பரோ வைர கற்களை பதித்த மோதிரத்தை அணிந்து கொண்டார்.ஒரு மண்டல காலத்திற்கு பிறகு எனக்கு அடிக்கடி உடல்நிலையில் வெப்ப நோய்களின் தாக்கமும் சுரமும் தாக்க துவங்கியது.மருத்துவ செலவுடன் நாம் மோதிரத்தின் தன்மையை அறியாமல் அணிந்து இருந்தோம்.நண்பரோ இருக்கும் எல்லையை விட்டு வடக்கின் எல்லைக்கு குடிமாறி சென்று விட்டார்.சில மாதம்கழித்து நாம் அவரை சந்தித்த பொழுது பணப்பிரச்சனை மிகுந்ததால் தந்தை இடம்மாறி சென்றதாகவும் புதிய வீட்டிற்கு சென்ற பிறகு தனக்கு அடிக்கடி தலைவலி வந்ததாகவும் சொன்னார்.கைகளில் மோதிரத்தை காணாது கேட்டபொழுது அதை பணப்பற்றாக்குறைக்கு விற்றுவித்தாக சொன்னார்.அடிக்கடி மருத்துவமனை செல்வதால் நாம் அந்த ரத்தினம்களை கழட்டிய வைக்கும் சூழல் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் அதை அணிவதை மறந்து விட்டேன்.


இரத்தின கற்களை அணிவதில் சில நுணுக்கம்கள் உள்ளன என்பதை நாம் அவைகளை அணிந்து அனுபவித்த பின்பே புரிந்து கொள்ளமுடிந்தது.ஆம்“

சில ரத்தினம்கள் நம் உடலின் இடுப்பின் வசத்திலும் சில ரத்தினம்கள் இதயத்தின் வசத்திலும் சில ரத்தினம்கள் கழுத்தின் வசத்திலும் சில ரத்தினம்கள் நெற்றியின் வசத்திலும் சிலரெத்தினம்கள் கேசத்தின் மேலயும் அணிவதால் மட்டுமே அவைகள் சுபமான பலன்களையும் மேன்மையும் ஏற்படுத்தி தரும்”என்பதனை

அவைகளை அணிந்து வாழ்ந்த அரச குலத்தவைரையும் அழிந்த அரச குலத்தவரையும் ஜமீன்களையும் வணிகர்களையும் இவர்கள் பற்றிய தகவல்களை படித்த பொழுது புரிந்து கொள்ளமுடிந்தது.
இதை சோதனை செய்து பார்க்க  முதலில் தேர்வு செய்தது வைர கற்களை.

மகரலக்னத்திற்க்கு  என்பதால் ஒரு வைர கற்களை மோதிரத்தில் பதித்து அதை வலது சூரிய விரலில் அணிந்து கொண்டால் நோய்களின் தாக்கம் இல்லாமலும் மற்றும் எதிர்த்து நிற்பவர்களின் வேகம் நம்மை தாக்காது என்றும் நாம் முடிவு செய்து அணிந்து கொண்டோம்.

அணிந்த ஒரு மண்டல காலத்திற்குள் நாம் குடும்பத்துடன் திருப்பதி சென்ற அங்கு உண்டியலில் காணிக்கை செலுத்த முயற்சித்தபொழுது விரலில் இருந்த மோதிரம் உண்டியலில் உள்ளே விழுந்து எனக்கு அதிர்ச்சியாக ஏற்படுத்தியது.
ஒரு பெரியவரிடம் இந்த சம்பவத்தை சொன்னபொழுது அவர் சொன்னது

“ஒரு மரத்தை உபயோகிக்க மர ஆசாரி தேர்வு செய்யும் பொழுது நன்றாக வளர்ந்து முதிர்ச்சியும் உறுதியும் அந்த மரம் பெற்று இருந்தால் வைரம் பாய்ந்தது மரம் என்று சொல்வதும் நம் உடல் உறுதியும் பலமும் பெறும் பொழுது வைரமான உடம்பு என்று சொல்வது வழக்கம் இதை மேலோட்டமாக கவனித்தால் நமக்கு ரகசியம்கள் புலப்படாது.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.
கரியாகி போகும் நம் உடலை போல கரியாகி போன்றவைகளில் இருந்தே வைரம் உண்டாகிறது.

இவைகள் உண்டாக லட்சம் ஆண்டுகள் ஆகும்.
இது அணிந்து கொள்ளும் ஒரு மனிதனின் உடலில் வசீகரத்தை கொடுத்ததும் வாழ்க்கையை புரட்டிப்போடும் தன்மையை கொண்டது என்பதால் இதை பற்றி ஞானம் இல்லாமல் அணிந்து கொள்ளக்கூடாது.

குறிப்பாக முகத்தில் வைக்கவேண்டிய வைரத்தை கைகளில் அணிந்தது தவறு”

வைரத்தின் குணத்தை புரிந்து கொள்ளாமல் அணிந்த பல ராஜவம்சத்தினரும் அழிந்து போனது சுக்ரனின் மறைமுக அசுர சக்திகளான கர்வதாலும் காமத்திலும் தான் என்றார்.


திருமலை தெய்வம் உன்னுடைய கர்மத்தை கணக்கிட்டு உடலில் இருந்த அசுர சக்திகளை எடுத்து கொண்டார்.இது ஒரு வகையில் உனக்கு பரிகாரம் என்றும் சொல்லலாம் என்றார்.

அந்த பெரியவரிடம் பேசியபின் தான் நாம் வைர கற்களை மூக்குத்தியாக பதித்த பெண்களை கண்டபொழுது வைரத்தை முகத்தில் அணிவது தான் சரியென்றும் இது பெண்களுக்கு மட்டுமே சரியான பலன்களை தரும் ரத்தினம்கள் என்று புரிந்து கொள்ளமுடிந்தது.


தலை வலி என்று என்னிடம் சொல்லும் நபர்கள் எவராயினும் நாம் அவர்களிடத்தில் கண்களை சோதனை செய்திர்களா?மலக்குடலை கவனித்தீர்களா?தலையில் நீர் உள்ளதா என்று ஆய்வு செய்திர்களா? பற்களை சோதனை செய்திர்களா?என்பதுடன்

வைர கற்கள் அல்லது மரகதகற்களை உடலில் மோதிரமாகவோ மாலையாகவோ அணிந்து உள்ளீர்களா?என்றும் கேட்பேன்.

ஆம் கற்களில் வெளிப்படும் ஒளி கதிர்கள் கண்களின் மூலம் ஊடுருவி மூளையை தாக்கும் சக்தி கொண்டவை என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இதன்பொருட்டே கோவில்களில்
தெய்வம்களுக்கு குறிப்பிட்ட கற்களை தலைக்கு மேலும் சில கற்களை முகத்திலும் கைகளிலும் அணிவித்து வணங்கி வந்தார்கள்.
வளரும்…….



 

நன்றி
அகத்தியர்
காக்கையர் ஆசைகளுடன் …சீடர்களின் சீடன்.